உலகளவில் உள்ள பாரம்பரிய பாரத நாட்டியத்தின் பெருமையை பரப்பி, மாணவர்களின் தனி திறனை வளர்த்து, *திறமையான நடனக் கலைஞர்களாக உருவாக்குவது* எங்கள் நிறுவனத்தின் முக்கியமான இலக்கு. பாரதநாட்டியக் கலையில் 25 ஆண்டு கால அனுபவத்துடன் மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி அளிக்கப்பட்டு புகழ் பெற்று விளங்கும் எங்களது திலகவதி நாட்டியாலயா பாரம்பரியத்திற்கும் புதுமைக்கும் இடையிலான பாலமாக செயல்பட்டு, மாணவர்களுக்கு சிறந்த கற்றல் அனுபவத்தை வழங்கி மாணவர்களின் தனி திறமையை வெளி கொண்டுவர ஒவ்வொரு வருடமும் நாங்கள் நடத்தும் முக்கிய நிகழ்வுகளில் *சலங்கை பூஜை விழா, **சிவராத்திரி விழா, **நவராத்திரி விழா, **கோவில் திருவிழா, **அரங்கேற்றம்* மற்றும் தொண்டு நிகழ்ச்சிகள் ஆகியவை இடம்பெறுகின்றன. கோவில் விழாக்களில், *தேர் திருவிழா, கும்பாபிஷேகம், சிறப்பு பூஜை நாட்கள்* போன்ற நிகழ்வுகளில், கலையின் ஆழ்ந்த உணர்வுகளை பகிரும் ஒரு பக்திமிகு மேடையில் மெய்சிலிர்க்கும் நிகழ்வாக மாணவர்கள் தங்களின் நாட்டிய திறமையை வெளிப்படுத்தி, ஆன்மீக பக்தியுடன் கலையை இணைக்கிறார்கள். அனைத்து நிகழ்வுகளும் *பக்தி, பாவம், ராகம், தாளம், லயம்* ஆகியவற்றை ஒருங்கே வெளிப்படுத்தும் விதமாக அமைக்கப்படுகின்றன. பாரம்பரிய நாட்டியத்தை பாதுகாத்து. கலையின் தூய்மை, பக்தி, ஆகியவற்றை அடுத்த தலைமுறைக்கு கலைப்பயணம் தொடர செய்வதே எங்கள் நாட்டியாலயா கடமை!
என்னுடைய தனிப்பட்ட நடன அமைப்பு, கற்றல் முறைகள் மற்றும் கலைக்கான உறுதிப்பாட்டில் வெளிப்படுகிறது. பாரம்பரியத்தை ஆதாரபூர்வமாகக் கற்பித்தலுடன், சமகால புதுமைகளையும் இணைக்கும் திறனே என் அடையாளம்.
நாட்டிய மேடை
தூய பாரம்பரிய நாட்டியத்தை கற்பித்து, மாணவர்களின் திறனை வளர்த்துச் செழிக்கச் செய்து, கலையின் ஆழ்ந்த உணர்வுகளை பகிரும் ஒரு பக்திமிகு மேடை.
எங்கள் நாட்டியத்தின் மூலம் நடத்தப்படும் இந்த புனித விழாக்கள் பக்தி, பாரம்பரியம், மற்றும் கலைமிகு நாட்டியத்தை இணைக்கும் சிறப்பான கலை நிகழ்வுகளாக விளங்குகின்றன
நாட்டியத்தின் மூலம் பக்தி, பாவம், ராகம், தாளம், லயம் ஆகியவற்றை ஒருங்கே வெளிப்படுத்தி, கோவில் விழாக்களில் கலையின் மகிமையை பரப்புகிறோம். பொது மக்களுக்கும், பக்தர்களுக்கும் நடனம் மூலம் தெய்வீக அனுபவம் அளிக்கும் வகையில், எங்கள் நிகழ்வுகள் பிரமாண்டமாக நடைபெறுகின்றன.